நாட்டில் டெங்கு பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் டாக்டர் பிரஷிலா சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தான் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி போன்ற மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுமக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பாக, இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் தாமதிக்காமல் தகுதிவாய்ந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம் என சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
________________________________________________________________________________________________________________________________________
Health authorities report over 13,000 dengue cases and four deaths in Sri Lanka so far this year. With high infection rates in districts like Colombo and Gampaha, the public is urged to seek medical attention if a fever lasts for more than two days.