கொழும்பின் அக்குரெகொட பகுதியில் 2026 பெப்ரவரி 13ஆம் திகதி சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவி ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டாவது துப்பாக்கிதாரி, மேலும் 10 பாரிய குற்றங்களுடன் தொடர்புடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட சட்டத்தரணி தம்பதியின் வழக்கோடு தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரி மொனராகலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் கடற்படை வீரரான இவர் மீது பாலியல் வன்புணர்வு, கொலை, கொள்ளை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பாரிய குற்றச்சாட்டுகள் உள்ளன.
கரந்தெனிய சுத்தா என்பவரின் கட்டளைக்கு இணங்க, பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் சிறிதத் தம்மிகவை லாலா என்பவருடன் இணைந்து கொலை செய்ததையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
__________________________________________________________________________________________________________________________________________
The second gunman involved in the murders of lawyer Buddhika Mallawarachchi and his wife in Colombo has been arrested in Monaragala, revealing his involvement in 10 other major crimes, including sexual assault and murder. He confessed to killing former Boossa Prison Superintendent Siridath Dhammika on instructions from ‘Karandeniya Sudda’.