கல்வி புகட்ட வேண்டிய ஆசிரியர்களே வேலியே பயிரை மேய்ந்த கதையாக மாறியுள்ள அதிர்ச்சி சம்பவம் ஒடிசாவில் அரங்கேறியுள்ளது. ஒரு ஆசிரியர் தொடங்கிய இந்த அராஜகம், பின்னர் மற்ற நான்கு ஆசிரியர்களுக்கும் தெரியவந்த நிலையில், அவர்களும் அந்தச் சிறுமியைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். நீண்ட நாட்களாகத் தொடர்ந்த இந்தத் துயரத்தை அந்தச் சிறுமி அண்மையில் தனது பெற்றோரிடம் கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.
இதனைத் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, மாவட்ட குழந்தைகள் நலக் குழுவின் உதவியை நாடினார். அக்குழுவினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஆசிரியர்களின் கொடூர முகம் அம்பலமானது. இதனைத் தொடர்ந்து ராஜ்கனிகா காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட ஐந்து ஆசிரியர்களும் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மாவட்ட மூத்த காவல் அதிகாரி, பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், மாவட்ட கல்வி அலுவலரும் இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். இந்தச் செயலில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனப் பொதுமக்கள் கொந்தளிப்புடன் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
_________________________________________________________________________________________________________________________________________
Five teachers at a private school in Odisha’s Kendrapara district have been arrested for the repeated sexual assault of a 13-year-old student over several months. The horrific abuse came to light after the girl informed her parents, leading to a police investigation initiated by the District Child Welfare Committee, which has prompted public outrage and demands for severe punishment.