நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நடைமுறையில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர்களுக்கான தகுதிகளில் இந்தத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, விண்ணப்பதாரர்கள் தங்களது பட்டப் படிப்பை பூர்த்தி செய்திருக்க வேண்டிய இறுதி நாள் 2026 மார்ச் 5 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்தத் காலக்கெடு மாற்றம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்தத் திருத்தத்தின் காரணமாக, அண்மையில் பட்டப் படிப்பை முடித்த பெருமளவிலான இளைஞர், யுவதிகளுக்கு ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் தட்டுப்பாட்டை விரைவாக நிவர்த்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
________________________________________________________________________________________________________________________________________
The Sri Lankan government has amended the recruitment criteria for graduate teachers in national and provincial schools across Sinhala, Tamil, and English mediums. Following cabinet approval, the deadline for completing degree qualifications has been extended to March 5, 2026, allowing more graduates to apply for these vacancies.