பிங்கிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிலாபம் – குருநாகல் வீதியில் மேல் கொஸ்வத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
சிலாபம் நோக்கிச் சென்று கொண்டிருந்த லொறியொன்று, வீதியோரமாக நடந்து சென்றுகொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் மீது மோதியதில் இந்தத் துரதிர்ஷ்டவசமான விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்த சிறுவர்கள் இருவரும் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி ஒரு சிறுமி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் ஹல்மில்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுமி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
____________________________________________________________________________________________
A 13-year-old girl from Halmillewa died following a tragic road accident on the Chilaw-Kurunegala road in the Upper Koswatta area. The accident occurred when a lorry heading towards Chilaw struck two children walking along the roadside; despite being rushed to the Chilaw hospital, the girl succumbed to her injuries.