வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (2) வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் உட்பட காலி, மாத்தறை மாவட்டங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பிறகு ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாக சில பகுதிகளில் சுமார் 50 மி.மீ வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலை வேளையில் மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
_______________________________________________________________________________________________________________________________________________
The Department of Meteorology predicts frequent showers today in several provinces including Northern, Eastern, and North-Central regions. Other areas may experience evening thundershowers with heavy rainfall up to 50mm in some spots, and the public is advised to take precautions against lightning and strong winds.