Skip to main content

Super Tamils

இரண்டு மனைவி–ஒரு கணவர்: வினோத தீர்ப்பு, நெட்டிசன்கள் அதிர்ச்சி

உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் மாவட்டம், அசிம் நகர் காவல் எல்லைக்குட்பட்ட நாக்லியா அகில் கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இதில் ஒரு திருமணம் பெரியவர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்டது, மற்றொன்று அவர் காதலித்துச் செய்த திருமணம். இந்த நிலையில், “கணவர் எனக்குத்தான் சொந்தம்” என்று கூறி இரண்டு மனைவிகளும் தினமும் மல்லுக்கட்டி வந்துள்ளனர்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

நாளுக்கு நாள் அதிகரித்த இந்த குடும்பச் சண்டை ஒருகட்டத்தில் காவல் நிலையம் வரை சென்றது. வழக்கை விசாரித்த அசிம் நகர் காவல்துறையினர், இந்தப் பிரச்சினையை சுமுகமாகப் பேசித் தீர்க்கும்படி கிராமப் பெரியவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து கூடியது. அங்கு வினோதமான, அதேசமயம் ஒரு சமரசத் தீர்வு எட்டப்பட்டது. கணவரை இரண்டு மனைவிகளும் சமமாகப் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஒரு விசேட கால அட்டவணை தயாரிக்கப்பட்டது.
Free picture: meeting, people, village, Uganda, Africa

அந்த ஒப்பந்தத்தின்படி, வாரத்தின் முதல் மூன்று நாட்களான திங்கள், செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் கணவர் முதல் மனைவியுடன் தங்க வேண்டும். அடுத்த மூன்று நாட்களான வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அவர் இரண்டாவது மனைவியுடன் இருக்க வேண்டும். வாரத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டும் கணவரின் விருப்பத்திற்கு விடப்பட்டுள்ளது; அன்று அவர் யாரிடம் இருக்க விரும்புகிறாரோ அவரோடு இருக்கலாம்.

இந்த வினோதமான நேர அட்டவணையை கணவரும், இரண்டு மனைவிகளும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் இந்த “பிரித்து கொடுத்தல்” ஒப்பந்தம் தற்போது வைரலாகி வருகின்றது.

_________________________________________________________________________________________

A village panchayat in Uttar Pradesh, India, has delivered an unusual verdict to settle a dispute between a man and his two wives. To end their constant fighting over his companionship, a weekly schedule was drafted: the husband will spend the first three days with his first wife, the next three days with his second wife, and is free to choose between them on Sundays.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *