Skip to main content

Super Tamils

டிட்வா சூறாவளி பாதிப்பு…! வீதிகளை புனரமைக்க உலக வங்கி 110 மில்லியன் டொலர் நிதி.

டிட்வா சூறாவளியால் கடுமையாகச் சேதமடைந்த இலங்கையின் 600 கிலோமீற்றர் வீதிகளைப் புனரமைத்து மறுசீரமைப்பதற்காக 110 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை உலக வங்கி அங்கீகரித்துள்ளது. இந்த நிதி உதவி நேற்று (30) அங்கீகரிக்கப்பட்டதாக உலக வங்கி அறிவித்துள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் சந்தைகள், பாடசாலைகள் மற்றும் சுகாதார சேவைகளை மீண்டும் தடையின்றி அணுகுவதற்கு உதவும் வீதிகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.

புனரமைக்கப்படும் வீதிகள் எதிர்கால காலநிலை மாற்றங்களைத் தாங்கும் வகையில் அமைக்கப்படவுள்ளன. மேம்படுத்தப்பட்ட நீர் வடிகால் கட்டமைப்புகள், மண்சரிவு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் புதிய பொறியியல் தொழில்நுட்பங்கள் என்பன இத்திதட்டின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளுக்கு டிட்வா சூறாவளி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள போதிலும், மீள்கட்டமைப்பு மூலம் மேலும் வலுவானதும் தாக்குப்பிடிக்கக்கூடியதுமான உட்கட்டமைப்பு கட்டமைப்பை உருவாக்குவதற்கான வாய்ப்பு இலங்கைக்குக் கிடைத்துள்ளதாக உலக வங்கி குழுமத்தின் இலங்கைக்கான முகாமையாளர் கெவோர்க் சர்க்சியன் தெரிவித்தார்.

இந்தத் திட்டம் வீதிகளைப் புனரமைப்பதுடன் நின்றுவிடாமல், மக்களின் வாழ்வாதாரங்களை மீளக் கட்டுதல், விவசாயிகளைச் சந்தைகளுடன் இணைத்தல் மற்றும் குடும்பங்களை அத்தியாவசிய சேவைகளுடன் மீண்டும் இணைத்தல் ஆகியவற்றையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்