Skip to main content

Super Tamils

ILT20 ஏலப்பட்டியலில் ஹசரங்க, ஷானக்க உள்ளிட்ட இலங்கை வீரர்கள்.

துபாயில் நாளை (01) நடைபெறவுள்ள ‘DP World ILT20’ கிரிக்கெட் தொடரின் 5ஆவது பருவகாலத்துக்கான வீரர்கள் ஏலப் பட்டியலில் வனிந்து ஹசரங்க, தசுன் ஷானக்க, அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் குசல் பெரேரா உள்ளிட்ட இலங்கை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

இந்த ஏலத்தில் வனிந்து ஹசரங்க மற்றும் தசுன் ஷானக்க ஆகியோர் 80,000 அமெரிக்க டொலர் அடிப்படை விலைப் பிரிவிலும், அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் குசல் பெரேரா ஆகியோர் 40,000 அமெரிக்க டொலர் அடிப்படை விலைப் பிரிவிலும் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

மொத்தம் 23 நாடுகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்த ஏலத்தில், தொடரிலுள்ள 6 அணிகளும் தலா குறைந்தபட்சம் 1.3 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை வீரர்களைக் கொள்முதல் செய்வதற்காகப் பயன்படுத்தவுள்ளன. இந்தத் தொடரின் 5ஆவது பருவகாலப் போட்டிகள் எதிர்வரும் நவம்பர் 21 முதல் டிசம்பர் 20 வரை அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்