மகளிர் ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் 2026 இறுதிப்போட்டியில், துபாயில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நடத்தை விதிகளை மீறியதற்காக இந்திய சகலதுறை ஆட்ட வீராங்கனை கிராந்தி கௌட் (Kranti Gaud) தண்டனைக்கு உள்ளாகியுள்ளார்.
துபாயில் நடந்து முடிந்த மகளிர் ஆசியக் கிண்ண 2026 இறுதிப் போட்டியில், ஐ.சி.சி விதிமுறைகளை மீறியதாக இந்திய ஆல்ரவுண்டர் கிராந்தி கௌட் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போட்டியின் போது களத்தில் வீரர்களை சீண்டும் வகையில் நடந்துகொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இலங்கை இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே தொடக்க வீராங்கனை இமேஷா துலானியை அவுட் ஆக்கிய கிராந்தி கௌட், அவர் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறும்படி சைகை செய்து கோபமூட்டியுள்ளார். இது ஐ.சி.சி விதிகளுக்கு எதிரான செயலாகும்.
இந்த நடவடிக்கைகாக அவருக்கு மேட்ச் ஃபீ-யில் இருந்து 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அதோடு அவரது ஒழுக்கக்கேடான பதிவுக்காக ஒரு டிமெரிட் புள்ளியும் (Demerit point) ஐ.சி.சி தரப்பில் வழங்கப்பட்டுள்ளது.
போட்டி நடுவர் சுப்ரியா ராணி தாஸ் வழங்கிய இந்த தண்டனையை கிராந்தி கௌட் எந்தவித மறுப்புமின்றி ஏற்றுக்கொண்டார். இதனால் இந்த விவகாரத்தில் கூடுதல் விசாரணைகள் எதுவும் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Indian all-rounder Kranti Gaud was penalized with a 10% match fee fine and a demerit point for breaching ICC code of conduct after giving an aggressive send-off to Sri Lankan opener Imesha Dulani during the Women’s Asia Cup 2026 final in Dubai.