Skip to main content

Super Tamils

யாழில் சேற்றில் புதைந்த கார்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

யாழ்ப்பாணத்திலிருந்து மந்திகை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று அச்சுவேலி வல்லைப் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

யாழ்ப்பாணம் திருநெல்வேலி, ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகள் ஆகியோர் காரில் பயணித்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கார் வல்லைப் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென சாரதியின் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த சேற்றுக்குள் பாய்ந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரில் இருந்த மூவரும் பலத்த காயமடைந்தனர். குறிப்பாக மகளின் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Three members of the same family were seriously injured after their car veered off the road and overturned into a muddy area in Vallai, Achchuveli. The family, residing on Adiapatham Road in Thirunelveli, was traveling from Jaffna toward Manthikai when the driver lost control of the vehicle. The victims, including a daughter who sustained severe leg injuries, have been admitted to the Manthikai Base Hospital. Achchuveli Police are conducting further investigations.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *