கோடை காலத்தில் ஜப்பானில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலையை எதிர்கொள்ளும் வகையில், அங்கு ‘மனிதர்களுக்கான ஃபிரிட்ஜ்’ எனும் புதுமையான குளிரூட்டும் மையங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஜப்பானில் இப்போது கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது. இந்தச் கடுமையான வெப்ப அலையைச் சமாளிக்க மக்கள் திணறி வரும் நிலையில், அங்கு புதிதாக ஒரு அசத்தலான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுதான் ‘மனிதர்களுக்கான ஃபிரிட்ஜ்’ என்று அழைக்கப்படும் சிறப்பு குளிரூட்டும் மையங்கள்! பார்ப்பதற்கு வீதிகளில் இருக்கும் குளிர்பான வண்டி மாதிரியே இது வடிமைக்கப்பட்டுள்ளது.
இந்த எந்திரத்தின் உள்ளே எப்போதும் பதினைந்து டிகிரி செல்சியஸ் அளவில் தான் வெப்பநிலை இருக்கும். இதன் உள்ளே ஒருவர் போய் அமர்ந்ததும், அவருடைய தலை, கழுத்து மற்றும் முதுகுப் பகுதிகளில் ஐந்து டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குளிர்ந்த காற்று பாயும். இதனால் வெயிலில் அலைந்து திரிந்து வருபவர்களின் உடல் வெறும் ஐந்து நிமிடங்களிலேயே சில்லென்று மாறிவிடும்.
மனிதர்களின் உடல் அளவுக்கு மீறி அதிகமாகக் குளிர்ந்து போய்விடக் கூடாது என்பதற்காக, சரியாக இருபது நிமிடங்கள் ஆனதும் இதுவே தானாக நின்றுவிடும் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வெயிலில் கஷ்டப்பட்டு வேலை செய்யும் கட்டிடத் தொழிலாளர்கள், பேக்டரி ஊழியர்கள் மற்றும் ரோட்டோரத்தில் நடமாடும் பொதுமக்கள் எனப் பலரும் இந்த கடும் வெப்ப பக்கவாதத்தில் இருந்து தங்களை எப்படிக் காப்பாற்றிக் கொள்வது என்று தெரியாமல் தவித்த நிலையில், இந்த நவீன வசதி அவர்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக வந்துள்ளது.
தற்போது தலைநகர் டோக்கியோ மற்றும் அதையொட்டியுள்ள ஜப்பானின் முக்கியமான பெருநகரப் பகுதிகளில் இந்த வித்தியாசமான மனித ஃபிரிட்ஜ் எந்திரங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. மக்களிடமும் இதற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
Japan has introduced innovative “human fridges” in major cities like Tokyo to help people, especially outdoor workers, combat severe summer heatwaves and prevent heat stroke by quickly cooling the body within minutes.