Skip to main content

Super Tamils

புத்தளம்–அட்டவில்லுவ விபத்தில் இருவர் உயிரிழப்பு

புத்தளம், அட்டவில்லுவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

நேற்று (13) இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் உடனடியாக புத்தளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Death - definition and meaning with pictures | Picture Dictionary & Books

மற்றொரு நபர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும், மோட்டார் சைக்கிள்களின் பின்னால் அமர்ந்து பயணித்த மற்றுமொரு இருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Two people lost their lives following a collision between two motorcycles in the Attavilluva area of Puttalam on the night of the 13th. Both riders succumbed to their injuries—one at the Puttalam hospital and the other while being transferred to the Colombo National Hospital—while two pillion passengers remain under treatment. Police are currently investigating the exact cause of the accident.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *