இன்ஸ்டாகிராம் பயனர்களின் பொதுப் புகைப்படங்களை (Public photos) அடிப்படையாகக் கொண்டு, யார் வேண்டுமானாலும் புதிய AI படங்களை உருவாக்கிக் கொள்ளும் வசதியை மெட்டா நிறுவனம் வழங்கி வந்தது. ‘மியூஸ் இமேஜ்’ (Muse Image) என்ற பெயரைக் கொண்ட இந்த புதிய அம்சத்தை தற்போது அந்த நிறுவனம் அதிகாரபூர்வமாகத் திரும்பப் பெற்றுள்ளது.
இந்த அம்சம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட போது, பயனர்களுக்கு எந்தவொரு முன்கூட்டிய தகவலும் வழங்கப்படவில்லை. மாறாக, 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பயனர்களின் கணக்குகளிலும் இது தானாகவே ஆக்டிவேட் செய்யப்பட்டிருந்தது. பயனர்கள் இதில் இருந்து வெளியேறுவதற்கான (Opt-out) செட்டிங்ஸ் ஆப்ஷனும் கூட, பக்கங்களுக்குள் மிக ஆழமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
இதன் காரணமாக, ஒரு நபரின் அனுமதி இல்லாமலேயே அவருடைய முகத்தை வைத்து யாரோ ஒரு புதிய நபர் போலியான AI படங்களை உருவாக்கிவிட முடியும் என்ற ஆபத்தான சூழல் உருவானது. இதற்கு எதிராகத் தொழில்நுட்ப வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஹாலிவுட் திரைக்கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல முன்னணி அமைப்புகள் தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தன. இந்த தொடர் பொதுப் போராட்டத்திற்குப் பணிந்தே மெட்டா நிறுவனம் இந்த அம்சத்தை தற்போது முழுமையாக நீக்கியுள்ளது.
Meta has officially discontinued its new “Muse Image” feature on Instagram, which allowed users to generate AI images using other people’s public photos without explicit consent. The feature faced severe backlash from tech experts, the public, and organizations like the Hollywood Actors’ Union due to major privacy concerns, its automatic activation for users over 18, and deeply hidden opt-out settings, ultimately forcing Meta to scrap the tool entirely.