இலங்கைக்குள் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது கட்டாய உழைப்பைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்களை.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இந்த புதிய சட்ட விதிமுறையானது கடந்த ஜூலை 10ஆம் திகதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
புதிய விதிகளின்படி, தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி வாங்கும் உழைப்பின் மூலம் முழுமையாகவோ அல்லது ஓரளவோ வெட்டி எடுக்கப்பட்ட, தயாரிக்கப்பட்ட அல்லது உற்பத்தி செய்யப்பட்ட எந்தவொரு பொருளையும் நாட்டிற்குள் கொண்டு வர இனிமேல் அனுமதி கிடையாது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த தடை உத்தரவு எந்தெந்த குறிப்பிட்ட பொருட்களுக்கோ அல்லது நாடுகளுக்கோ பொருந்தும் என்பதை அரசு அவ்வப்போது ஆய்வு செய்து அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், தாங்கள் இறக்குமதி செய்யும் பொருட்களில் கட்டாய உழைப்பு சுரண்டல் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் முறையான ஆவணங்களை, இறக்குமதியாளர்கள் அனைவரும் சுங்கத்துறை பணிப்பாளர் நாயகத்திடம் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கட்டாய உழைப்பு மூலம் உற்பத்தியாகும் பொருட்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க போதிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, இலங்கை உட்பட 60 நாடுகள் மீது கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.
இந்த அதிரடி திட்டத்தின்படி, இலங்கை மீது 12.5 சதவீத கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவியது.
அமெரிக்காவின் இந்த கடுமையான பொருளாதார அழுத்தத்தைத் தொடர்ந்தே, கட்டாய உழைப்புக்கு எதிரான சட்டங்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை அரசு தற்போது இந்த அதிரடி இறக்குமதி தடையை நடைமுறைப்படுத்தியுள்ளது.
The Sri Lankan government, led by President Anura Kumara Dissanayake in his capacity as the Minister of Finance, has officially banned the import of goods produced using forced labor, effective July 10. Under this new regulation, importers must provide proof to the Customs Director General that their goods are free from forced labor. This decision comes in response to U.S. President Donald Trump’s recent proposal to impose a 12.5% tariff on Sri Lankan imports due to inadequate measures against forced labor products, prompting the government to strengthen its domestic laws to align with international labor standards.