Skip to main content

Super Tamils

ஈரானின் தொலைத்தொடர்பு கோபுரங்களை குறிவைத்து அமெரிக்காவின் தொடர் தாக்குதல்!

தெற்கு ஈரான் பகுதியில் அமைந்துள்ள கம்யூனிகேஷன் டவர் ஒன்றை இலக்காகக் கொண்டு அமெரிக்க ராணுவம் அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தரப்பில் செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், பாதிக்கப்பட்ட அந்தத் தகவல் தொடர்பு கோபுரத்திற்கு எந்தளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்த விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. முன்னதாக, ஹோர்முஸ் நீரிணைப் பகுதியை மூடிவிட்டதாக ஈரானின் புரட்சிகர காவல் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, ஈரானில் உள்ள 140 இலக்குகளின் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

The United States launched a series of targeted attacks on a telecommunications tower located in southern Iran, resulting in injuries to two people according to foreign media reports. While the extent of the damage to the tower remains undisclosed, these strikes follow an earlier announcement by the US Central Command stating it had hit 140 Iranian targets after Iran’s Revolutionary Guard Corps declared the closure of the Strait of Hormuz.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்