Skip to main content

Super Tamils

15 நோயாளிகளைக் கொன்ற ஜேர்மன் மருத்துவருக்கு ஆயுள் தண்டனை.

ஜேர்மனியில் பல டசின் கொலைகள் தொடர்பாக ஒரு மருத்துவர் மீது தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2021 செப்டம்பர் முதல் 2024 ஜூலை வரையிலான காலப்பகுதியில், நோயாளிகளின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று சிகிச்சை அளித்த ஜோஹன்னஸ் என்ற 41 வயது மருத்துவருக்கு பெர்லின் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இவர் அளவுக்கு அதிகமாக மயக்க மருந்துகளைக் கொடுத்து 12 பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் என மொத்தம் 15 பேரைக் கொன்றது நிரூபிக்கப்பட்டுள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

ஆனால், இந்த 15 மரணங்கள் என்பது அவர் செய்த கொடூரமான குற்றங்களின் ஒரு சிறிய பகுதி மட்டும்தான் என்று வழக்கை விசாரித்த நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மருத்துவர் இன்னும் 70-க்கும் மேற்பட்டோரைக் கொன்றிருக்கலாம் என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சந்தேகிக்கின்றனர்.

அவரது குற்றங்களின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, நீதிமன்றம் அவருக்கு இந்த மிகக் கடுமையான தண்டனையை வழங்கியுள்ளது. இதனால் அவர் எதிர்காலத்தில் சிறையில் இருந்து எளிதில் விடுதலையாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அவர் இனி வரும் காலங்களில் மருத்துவம் பார்ப்பதற்கும் நீதிமன்றம் வாழ்நாள் தடை விதித்துள்ளது. அந்த மருத்துவர் நோயாளிகளின் வலியைக் குறைக்கவோ அல்லது கருணைக் கொலை செய்யும் நோக்கத்திலோ இந்தச் செயலைச் செய்யவில்லை என்றும், மாறாக மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்த வேண்டும் என்ற கொடூரமான வெறியின் காரணமாகவே இதைப் புரிந்துள்ளார் என்றும் நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது.

கொலை செய்வதில் அவருக்கு ஒருவித வெறி இருந்ததாகக் குறிப்பிட்ட வழக்கறிஞர்கள், இந்த அப்பாவி மக்களைக் கொல்வதைத் தவிர வேறு எந்தவொரு நோக்கமும் அவருக்கு இருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட அனைவரும் அந்தச் சமயத்தில் அவரது சிகிச்சையில் இருந்தவர்கள் என்பதும், அவர்களின் வயது 25 முதல் 94 வரை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமன்றி, தான் செய்த கொலைக் குற்றங்களை மறைப்பதற்காகக் குறைந்தபட்சம் ஐந்து முறை பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு அவர் தீ வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை நீதிமன்றத்தில் பேசிய ஜோஹன்னஸ், தான் மக்களைக் கொன்றதை ஒப்புக்கொண்டதோடு தன் மீதே தனக்கு மிகுந்த விரக்தி ஏற்படுவதாகவும் கூறினார். ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டும் அவர் அடுத்தடுத்து இரண்டு நோயாளிகளைக் கொன்றுள்ள அதிர்ச்சித் தகவலும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

ஆரம்பத்தில் காப்பக சேவைகளை வழங்கும் தரப்பினருக்கு ஜோஹன்னஸின் செயல்பாடுகளில் சந்தேகம் எழுந்ததை அடுத்து, காவல்துறையினர் இதில் தலையிட்டு விசாரணையைத் தொடங்கினர்.

இதனைத் தொடர்ந்து அவர் கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடக்கத்தில் அதிகாரிகள் நான்கு மரணங்களை மட்டுமே விசாரித்த நிலையில், சந்தேகத்திற்குரிய மரணங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்ததால் தற்போது பல வழக்குகள் இன்னும் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் கொடூரச் சம்பவம், கடந்த 2019 ஆம் ஆண்டு 85 நோயாளிகளைக் கொன்ற குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்ற ஜேர்மன் செவிலியர் நீல்ஸ் ஹோகலின் (Niels Hoegel) வழக்கை மீண்டும் நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.

A 41-year-old German doctor named Johannes has been sentenced to life imprisonment by a Berlin court for killing 15 patients by administering lethal overdoses of anesthetics during home visits between 2021 and 2024. The court banned him from practicing medicine, noting that his crimes were driven by a desire for power rather than mercy, and prosecutors suspect he may be responsible for over 70 additional deaths.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்