Skip to main content

Super Tamils

கொழும்பில் பெண்ணின் ஆடம்பர வீடு முடக்கம்… பல லட்சம் சொத்துக்களும் பறிமுதல்!

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று 08 போதைப்பொருள் கடத்தல்காரரான பெண் ஒருவரின் பெருந்தொகை சொத்துக்கள் மற்றும் வீடு என்பன சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப்பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த ‘லொகு நோனா’ என்ற பிரபல பெண் போதைப்பொருள் கடத்தல்காரர், சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரம் மூலம் சேர்த்ததாகக் கருதப்படும் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தைக் கொண்டு இந்தச் சொத்துக்கள் வாங்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, 5.7 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள இந்தச் சொத்துக்களை ஏழு நாட்களுக்கு முடக்கி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள அவரது ஆடம்பர வீடு மற்றும் பல லட்சக்கணக்கான சொத்துக்கள் இவ்வாறு அதிரடியாக முடக்கப்பட்டுள்ளன. பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைத்த ரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் நடத்தப்பட்ட தீவிர விசாரணையை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் போதைப்பொருள் கடத்தி சம்பாதித்த பணத்தைக் கொண்டே அவர் இந்தச் சொத்துக்களை வாங்கியுள்ளார் என்பதைப் பொலிஸார் தங்களது முதற்கட்ட விசாரணையில் உறுதிப்படுத்தியுள்ளனர்.

The Illegal Assets Investigation Division has seized an upscale house and assets worth around 60 million LKR belonging to a major female drug trafficker, known as ‘Logu Nona’, in Grandpass, Colombo. Following a complaint received by Police Headquarters, investigations revealed that these luxury properties were acquired using money laundered through illegal drug trafficking, leading to a court order to freeze the assets.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்