Skip to main content

Super Tamils

2027 விடுமுறை காலண்டர் வெளியீடு…! பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்கள் அறிவிப்பு.

பொது விடுமுறை, வங்கி விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

இலங்கையின் 2027ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்கள் அடங்கிய அதிகாரப்பூர்வ கால அட்டவணை, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

1971ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க விடுமுறைகள் சட்டத்தின் கீழ், பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரான பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்னவின் கையொப்பத்துடன் 2493/05 இலக்க அதிவிசேட வர்த்தமானியாக இது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய வழிபாட்டு தினங்கள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நாட்களை அடிப்படையாகக் கொண்டு இந்த விடுமுறைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அவற்றுள் சில முக்கிய விடுமுறை நாட்கள் இதோ: தமிழ் தைப்பொங்கல் தினம் – ஜனவரி 15 சுதந்திர தினம் – பெப்ரவரி 04 சிங்கள, தமிழ் புத்தாண்டு – ஏப்ரல் 14 மே தினம் – மே 01 வைகாசி விசாகப் பூரணை தினம் – மே 19 தீபாவளித் திருநாள் – ஒக்டோபர் 28 நத்தார் தினம் – டிசம்பர் 25

இலங்கையின் நீண்டகால கலாசார பாரம்பரிய முறைமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், வழமை போன்றே அனைத்து பௌர்ணமி தினங்களும் பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் பல்லின கலாசார பன்முகத்தன்மையையும், மத விழுமியங்களையும் பாதுகாத்து, மக்களிடையே மத நல்லிணக்கத்தை பலப்படுத்தும் நோக்கில் இந்த விடுமுறைப் பட்டியல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்த விடுமுறை நாட்கள் குறித்த முழுமையான மற்றும் விரிவான விபரங்களை அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்குச் சென்று பொதுமக்கள் அறிந்துகொள்ள முடியும்.

The Government of Sri Lanka has officially released the public and bank holiday calendar for the year 2027 through an extraordinary gazette notification. Issued under the Holidays Act by the Minister of Public Administration, Provincial Councils, and Local Government, Professor A.H.M.H. Abayarathne, the schedule accommodates major religious, national, and traditional festivals, ensuring all full moon Poya days remain holidays to uphold cultural harmony.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்