Skip to main content

Super Tamils

‘கருப்பு’ திரைப்படம் 50 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சாதனை…

சூர்யாவின் “கருப்பு” திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்து சாதனை படைக்கும்!

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி கூட்டணியில் உருவான ‘கருப்பு’ திரைப்படம், தியேட்டர்களில் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆக்‌ஷன் கதைகளத்தை கொண்ட இந்தத் திரைப்படம், தமிழ்நாட்டில் மட்டும் 175 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல், உலகளவில் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது.

கடந்த ஜூன் 12ஆம் தேதியே ‘பிரைம் வீடியோ’ ஓடிடி தளத்தில் இப்படம் டிஜிட்டல் ரிலீஸ் ஆகிவிட்ட போதிலும், தியேட்டர்களில் இதற்கான மவுசும் கூட்டமும் இன்னமும் குறையவில்லை என்பதுதான் ஆச்சரியம்.

இப்படத்தின் 50ஆவது நாள் வெற்றியை ஒட்டி, தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளது.

“நம்பிக்கை, எமோஷன் மற்றும் மனிதநேயத்தை மையமாகக் கொண்ட ஒரு கதை… சாய் அபயங்கரின் துள்ளலான இசையில், நடிகர் சூர்யாவின் கேரியரில் இது ஒரு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றிப்படமாக அமைந்துள்ளது. திரையரங்குகளில் ‘கருப்பு’ படத்தின் 50 வெற்றிகரமான நாட்களைக் கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த இமாலய வெற்றி உங்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. எங்களின் அன்பான ரசிகர்களுக்கும், தியேட்டருக்கு வந்து படம் பார்த்த அனைத்து பார்வையாளர்களுக்கும், உங்களது அசைக்க முடியாத அன்புக்கும் ஆதரவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்” என தயாரிப்பு நிறுவனம் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

The action film “Karuppu,” starring Suriya and directed by RJ Balaji, has achieved a massive milestone by successfully completing 50 days in theaters. Despite its recent release on Prime Video, the movie continues to draw audiences to theaters, grossing over 175 crores in Tamil Nadu and surpassing 300 crores worldwide. To celebrate this grand success, the production house, Dream Warrior Pictures, shared a heartfelt note on social media thanking the fans and audience for their unwavering love and support.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்