போர்த்துக்கல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் குரோசிய அணிக்கு எதிரான 32 ஆவது சுற்றில் வெற்றி பெற்றுள்ளது, 2026 கால்பந்து செம்பியன்ஷிப் தொடரின் போட்டியில்.
இந்த அசத்தலான வெற்றியின் மூலம் போர்த்துக்கல் அணி அடுத்த சுற்றான 16 ஆவது சுற்றுக்குள் கம்பீரமாக நுழைந்துள்ளது. அங்கு அவர்கள் உலகக் கால்பந்து அரங்கில் மிகவும் பலம் வாய்ந்த அணியாகக் கருதப்படும் ஸ்பெயின் அணியை நேருக்கு நேர் சந்திக்கவுள்ளனர்.
ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த போர்த்துக்கல் – குரோஷியா அணிகளுக்கு இடையிலான இந்த 32 ஆவது சுற்று ஆட்டமானது கனடாவின் டொரன்டோ நகரில் அரங்கேறியது.
ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலிருந்தே களம் மிகவும் விறுவிறுப்பாகக் காணப்பட்டதுடன், தங்களின் திறமையை நிரூபிக்க இரு அண வீரர்களும் மிகக் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தினர்.
இப்படியொரு பரபரப்பான சூழலில், ஆட்டத்தின் 53 ஆவது நிமிடத்தில் குரோஷியா அணி வீரர்கள் அற்புதமாகச் செயற்பட்டு தங்களின் முதலாவது கோலை அடித்து முன்னிலை பெற்றனர்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், போர்த்துக்கல் அணியின் உலகப் புகழ்பெற்ற நட்சத்திர வீரரான ரொனால்டோ, ஆட்டத்தின் 68 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தித் தனது அணிக்கான முதல் கோலை அடித்தார்.
தொடர்ந்து இரு அணிகளும் சமபலத்துடன் மோதிய நிலையில், ஆட்டத்தின் கூடுதல் நேரமான 94 ஆவது நிமிடத்தில் போர்த்துக்கல் அணி தங்களின் வெற்றியை உறுதி செய்யும் இரண்டாவது கோலை அடித்து அசத்தியது.
இதன் அடிப்படையில், முன்னதாக நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரிய அணியை 3-0 என்ற கோல் கணக்கில் மிக எளிதாக வீழ்த்தி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ள பலம்பொருந்திய ஸ்பெயின் அணியுடன், 16 ஆவது சுற்றில் போர்த்துக்கல் அணி மோதவுள்ளது.
In the 2026 Football Championship round of 32, Portugal secured a thrilling 2-1 victory against Croatia in Toronto, Canada. After Croatia took the lead in the 53rd minute, Cristiano Ronaldo equalized with a penalty in the 68th minute, followed by a dramatic winning goal for Portugal in the 94th minute. With this win, Portugal has qualified for the round of 16, where they are set to face a formidable Spain team that advanced after defeating Austria 3-0.