Skip to main content

Super Tamils

முத்த சர்ச்சையில் சிக்கிய ஜோடி…! சட்டப்படி பகிரங்க தண்டனை

டிக்டாக் லைவில் முத்தம் கொடுத்துக் கொண்ட ஜோடிக்கு பொதுவெளியில் பிரம்படி தளம் தட்டப்பட்டுள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

தீவிர இஸ்லாமிய ஷரியா சட்டங்கள் அமலில் இருக்கும் இந்தோனேசியாவின் அச்சே மாகாணத்தில்தான் இந்த அதிரடி தண்டனை அரங்கேறியுள்ளது.

திருமணம் செய்யாமல் பொது இடத்தில் முத்தம் கொடுத்த குற்றத்திற்காக, நீதிமன்ற உத்தரவின்படி இவர்களுக்கு தலா 25 பிரம்படிகள் தண்டனையாக விதிக்கப்பட்டது.

இருப்பினும், இந்த ஜோடி ஏற்கனவே நான்கு மாதங்கள் சிறையில் கழித்துவிட்டதால், அதற்குப் பதிலாக 4 அடிகள் குறைக்கப்பட்டு, இறுதியில் இருவருக்கும் தலா 21 பிரம்படிகள் பகிரங்கமாக வழங்கப்பட்டன.

கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி, 22 வயது இளைஞரும், 25 வயது இளம்பெண்ணும் கார் ஒன்றில் அமர்ந்து கொண்டு முத்தம் கொடுப்பதை டிக்டாக்கில் நேரலையாக ஒளிபரப்பியுள்ளனர்.

இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் உள்ளூர் போலீசார் இவர்கள் இருவரையும் அதிரடியாகக் கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

An unmarried young couple in Indonesia’s strict Sharia-governed Aceh province was publicly caned 21 times each after being arrested for live-streaming themselves kissing inside a car on TikTok. Although they were initially sentenced to 25 lashes, the punishment was reduced by four counts due to the four months they had already spent in prison following their arrest in April.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்