சமந்தாவின் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ‘மா இண்ட்டி பங்காரம்’ திரைப்படம் கடந்த 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தத் திரைப்படம் தமிழில் ‘எங்கள் தங்கம்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் நடிகை சமந்தா அதிரடி ஆக்ஷன் நாயகியாக நடித்து அசத்தியுள்ளார். பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இத்திரைப்படத்தை, சமந்தாவும் ராஜ் நிடிமோருவும் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும், கௌதமி, ஸ்ரீமுகி மற்றும் குல்ஷன் ஆகியோர் இதில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திரைப்படத்திற்கு ஒருபுறம் கலவையான விமர்சனங்கள் கிடைத்து வந்தாலும், சமந்தாவின் திரையுலக மீள்வருகையை (கம்பேக்) அவரது ரசிகர்கள் ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தைக் கொண்டாடி வரவேற்று வருகிறார்கள்.
இப்படியான சூழலில், ‘எங்கள் தங்கம்’ திரைப்படம் வெளியான 6 நாட்களில் உலகளவில் பெற்றுள்ள வசூல் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, கடந்த 6 நாட்களில் மட்டும் இந்தத் திரைப்படம் 54 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது.
Actress Samantha’s latest action movie, released in Tamil as “Engal Thangam” (originally “Maa Inti Bangaram” in Telugu), hit the screens on the 19th. Directed by B.V. Nandini Reddy and co-produced by Samantha and Raj Nidimoru, the film has received mixed reviews but is being celebrated by fans as her official comeback. Despite the varied feedback, the movie has successfully grossed 54 crore rupees worldwide within its first six days of release.