Skip to main content

Super Tamils

தடைசெய்யப்பட்ட காட்டின் உள்ளே கண்டுபிடிக்கப்பட்ட புதிய மர்ம உலகம்!

ஆப்பிரிக்காவின் மிக முக்கியமான, மனிதர்களால் அதிகம் தீண்டப்படாத இயற்கை மண்டலங்களில் ஒன்றாகக் கருதப்படுவது கிழக்கு அங்கோலாவில் உள்ள ‘லிசிமா’  பீடபூமி பகுதி ஆகும். இங்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு பிரம்மாண்ட அறிவியல் ஆய்வுப் பயணத்தின் போது, இதுவரை மனித இனமே பார்த்திராத பல நூதனமான, விசித்திரமான புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கடந்த புதன்கிழமை (03) அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

காங்கோ, ஜாம்பேசி மற்றும் ஒகவாங்கோ போன்ற ஆப்பிரிக்காவின் மிக முக்கியமான நதிகளுக்கு நீராதாரமாக விளங்கும் இந்த லிசிமா பீடபூமி, பல தசாப்தங்களாக வெளி உலகிற்குத் தெரியாத ஒரு ரகசிய பூமியாகவே இருந்து வந்தது. அங்கே நிலவிய அடர்ந்த காடுகளும் கரடுமுரடான புவியியல் அமைப்பும் ஒருபுறமிருக்க, கடந்த 2002 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த 27 ஆண்டுகால கொடூரமான உள்நாட்டுப் போரும் இந்த இடத்தை அறிவியல் உலகம் நெருங்க முடியாமல் தடுத்து வைத்திருந்தது.

ஸ்டீவ் போயஸ்  என்ற விஞ்ஞானியால் தொடங்கப்பட்ட ‘தி வைல்டர்னஸ் புராஜெக்ட்’  அமைப்பைச் சேர்ந்த, உலகின் முன்னணி 16 ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் கடந்த பிப்ரவரி மாத மழைக்காலத்தில் ‘கசாய் லைஃப் அட்லஸ்’  என்ற பெயரில் ஒரு சவாலான தேடுதல் வேட்டையை நடத்தினர். இந்த தீவிர ஆய்வின் போதே, காட்டின் ஆழத்தில் மறைந்திருந்த இந்த விசித்திரமான மர்மங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

அங்கு கண்டுபிடிக்கப்பட்ட விசித்திர உயிரினங்களில் சில, ஒட்டுமொத்த உலக விஞ்ஞானிகளையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளன. குறிப்பாக, புற ஊதா  ஒளியை அதன் மீது பாய்ச்சும் போது நீல நிறத்தில் பளபளவென மின்னும் ‘கிரீட நண்டு சிலந்தி’  மற்றும் விஷத்தன்மை கொண்ட வண்டுகளைப் போல வேடமிட்டுத் திரியும் ‘லேடிபேர்ட் வெப் சிலந்தி’ ஆகியன இதில் அடங்கும்.

இதுமட்டுமல்லாமல், முற்றிலும் புதிய வகையான 8 தட்டாரப்பூச்சிகள்  மற்றும் 8 விசித்திரமான அந்துப்பூச்சிகள் உள்ளிட்ட பல்வேறு புதிய பூச்சியினங்களும் இந்த காட்டில் முதன்முறையாகக் கண்டறியப்பட்டுப் பட்டியலிடப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு (2025) அக்டோபர் மாதத்தில், சர்வதேச ‘ராம்சர்’  அமைப்பானது இந்த ‘லிசிமா லியா முவோனோ’ (அதாவது ‘உயிரின் பிறப்பிடம்’) பகுதியை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஈரநிலமாக அறிவித்தது. இந்த நிலையில், சுரங்கத் தொழில், காடழிப்பு மற்றும் காட்டுத்தீ போன்ற பேராபத்துகளில் இருந்து இந்த அரிய இயற்கை வளங்களைப் பாதுகாப்பதே தங்களது இறுதி நோக்கம் என்று இந்த ஆய்வுப் பயணத்தின் தலைவர் ராப் டெய்லர்கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Scientists during a recent expedition in Eastern Angola’s isolated ‘Lisima’ plateau discovered numerous hidden and exotic species, including a glowing Crowned crab spider and new varieties of dragonflies and moths. This ecologically vital region, untouched for decades due to a long-standing civil war and dense terrain, was explored by ‘The Wilderness Project’ team. Following its 2025 recognition as a Ramsar wetland, researchers emphasize the urgent need to protect this newly unveiled biodiversity hotspot from the threats of mining and deforestation.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்