Skip to main content

Super Tamils

மகுடம் சூடிய ராயல் சேலஞ்சர்ஸ்: விராட் கோலியின் ஆட்டத்தால் 2-வது முறையாக கோப்பை RCB வசம்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஐபிஎல் வரலாற்றில் தங்களது இரண்டாவது சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. 2026 ஐபிஎல் டி20 தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, பெங்களூரு அணி கோப்பையை கம்பீரமாகத் தன்வசப்படுத்தியது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த பெங்களூரு அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து களம் புகுந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆரம்பமே பேரதிர்ச்சியாக அமைந்தது. இந்த சீசன் முழுவதுமே சிறப்பாக விளையாடி வந்த அந்த அணியின் நட்சத்திர துவக்க வீரர்களான சாய் சுதர்சன் 12 ரன்களுக்கும், கேப்டன் சுப்மன் கில் 10 ரன்களுக்கும் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்து வெளியேறினர்.

இவர்களைத் தொடர்ந்து வந்த நிஷாந்த் சிந்து 20 ரன்களிலும், ஜோஸ் பட்லர் 19 ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றினர். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபுறம் வாஷிங்டன் சுந்தர் மட்டும் பொறுப்புடன் விளையாடி ரன்களை உயர்த்தினார். அதிரடியாக ஆடிய அவர் 37 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களம் நின்றார். இதனால், குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் சேர்த்தது.

பெங்களூரு அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரை ரசிக் சலாம் அபாரமாகச் செயல்பட்டு 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். மேலும் புவனேஷ்வர் குமார் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டுகளையும், க்ரூணல் பாண்டியா 1 விக்கெட்டையும் வீழ்த்தி குஜராத் அணியைக் கட்டுப்படுத்தினர்.

பின்னர் 156 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூரு அணிக்கு, வெங்கடேஷ் அய்யர் – விராட் கோலி ஜோடி சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தது. இதில் அதிரடியாக விளையாடிய வெங்கடேஷ் அய்யர் 16 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த தேவ்தத் படிக்கல் மற்றும் க்ரூணல் பாண்டியா தலா 1 ரன்னிலும், கேப்டன் ரஜத் பட்டிதார் 15 ரன்களிலும் விக்கெட்டை இழந்து அதிர்ச்சி அளித்தனர்.

மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், நங்கூரமாக நிலைத்து நின்று ஆடிய விராட் கோலி, தனது கிளாசிக் ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். இறுதியில், 18 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்த பெங்களூரு அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இறுதிவரை களத்தில் நின்ற விராட் கோலி 42 பந்துகளில் 75 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இந்த அதிரடி வெற்றியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2026 ஐபிஎல் கோப்பையை முத்தமிட்டது. கடந்த ஆண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்த பெங்களூரு அணி, இந்த ஆண்டும் கோப்பையைத் தக்கவைத்து, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சாம்பியனாகி சாதனை படைத்துள்ளது.

Royal Challengers Bengaluru (RCB) clinched the IPL 2026 championship title by defeating Gujarat Titans by 5 wickets in the final, marking their second consecutive tournament victory. Shaking off Gujarat Titans’ early batting collapse, Washington Sundar’s unbeaten 50 guided his team to 155/8, while Rasik Salam starred with 3 wickets for RCB. In response, despite a middle-order wobble, Virat Kohli anchored the chase magnificently with a blistering, unbeaten 75 off 42 balls to comfortably steer RCB to victory in just 18 overs.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *