தெற்கு ஈரான் பகுதியில் அமெரிக்க ராணுவம் திடீரென அதிரடித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே போர்நிறுத்தம் நடைமுறையில் இருப்பதோடு, பதற்றத்தைத் தணித்து போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வரும் சூழலில் இந்தத் தாக்குதல் அரங்கேறியுள்ளது.
ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் அமைந்திருக்கும் ஈரானிய ஏவுகணை ஏவுதளங்களையும், அவர்களது படகுகளையும் இலக்கு வைத்து, தங்களை தற்காத்துக் கொள்வதற்காகவே இந்த அதிரடித் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளைகம் விளக்கம் அளித்துள்ளது.

ஈரானியப் படைகளால் தங்கள் நாட்டு ராணுவ வீரர்களுக்கு ஏற்படவிருந்த ஆபத்துகளில் இருந்து அவர்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே, இன்று தெற்கு ஈரானில் இந்த தற்காப்புத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைகத்தின் செய்தித் தொடர்பாளர் டிமோதி ஹாக்கின்ஸ் கூறியுள்ளார். மேலும், கடல் பகுதியில் கண்ணிவெடிகளைப் புதைக்க முயன்ற ஈரானியப் படகுகளும், ஏவுகணை ஏவுதளங்களுமே இந்தத் தாக்குதலின் முதன்மை இலக்குகள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய போர்நிறுத்தக் காலத்தில் அமெரிக்க மத்திய கட்டளைகம் மிகுந்த பொறுமையைக் கடைப்பிடித்தாலும், தங்கள் படைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தற்காப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடும் என்றும் அவர் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார். தற்போதைய இந்த மோதல் போக்கு, இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் ஒரு தற்காலிக சுணக்கத்தை ஏற்படுத்தினாலும், இதன்காரணமாக பேச்சுவார்த்தை முற்றிலும் முறிந்து போவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
The US military has launched defensive strikes against Iranian missile sites and boats in southern Iran, near the Strait of Hormuz, to protect its personnel from potential threats. Despite occurring amidst an active ceasefire and ongoing peace talks, political experts suggest that while this incident poses a temporary hurdle, it is unlikely to completely derail the peace negotiations between the two nations.