Skip to main content

Super Tamils

இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போவது யார்…? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று மோதல்…!

பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று மோதல்…!

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

தர்மசாலாவில் இன்று நடைபெறும் குவாலிபயர் 1 போட்டியில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் பெங்களூரு, குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறின. அதன்படி இன்று புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் குவாலிபையர் 1-ல் மோதுகின்றன.

தர்மசாலாவில் நடைபெறும் இப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் வெற்றி பெரும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோல்வியுறும் அணி எலிமினேட்டரில் வெற்றி பெருகிற அணியை குவாலிபையர் 2-ல் எதிர்கொள்ளும்.

பெங்களூரு மற்றும் குஜராத் ஆகிய இரு அணிகளும் இறுதிபோட்டிக்கு முன்னேற கடுமையாக முயற்சி செய்யும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *