அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரானும் வளைகுடா நாடுகள் மீது தீவிரத் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
இந்தத் தாக்குதல்களில் அமெரிக்காவின் 17 ராணுவத் தளங்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. மேலும், வளைகுடா கடற்பகுதியில் செல்லும் எண்ணெய் கப்பல்களையும் ஈரான் குறிவைத்துள்ளது.
வளைகுடா பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘ஆபிரகாம் லிங்கன்’ மீது, 4 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்கியதாக ஈரான் கூறியுள்ளது. ஆனால், இந்தக் கூற்றை அமெரிக்காவின் மத்திய கமாண்ட் (CENTCOM) முற்றிலுமாக மறுத்துள்ளது. ஒருவேளை ஈரானின் கூற்று உண்மையாக இருந்தால், அது அமெரிக்காவிற்கு மிகப்பெரிய இழப்பாக அமையும்.
___________________________________________________________________________________________________________________________________________
Iran has launched retaliatory attacks against US-allied Gulf nations and military bases following joint strikes by the US and Israel. While Iran claims to have targeted 17 bases and fired missiles at the US aircraft carrier ‘Abraham Lincoln’, the US Central Command has denied the carrier strike, amid rising tensions in the Gulf maritime region.