ராஞ்சியிலிருந்து டெல்லி நோக்கிப் புறப்பட்ட இந்த மருத்துவ விமானம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் சத்ரா மாவட்டக் காட்டுப்பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் வானூர்தியில் பயணித்த நோயாளி, மருத்துவர் மற்றும் விமானிகள் உட்பட மொத்தம் ஏழு பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்றிரவு ராஞ்சியின் பிர்சா முண்டா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த பீச்கிராஃப்ட் C90 ரக விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. மோசமான வானிலை காரணமாக விமானத்தை திசைதிருப்ப அனுமதி கோரிய சில நிமிடங்களிலேயே ரேடார் திரையிலிருந்து இது மறைந்து போனது. பின்னர் சிமாரியா பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் பல மணிநேர தேடுதல் வேட்டைக்குப் பிறகு ஏழு பேரின் உடல்களையும் மீட்டுள்ளனர். விபத்துக்குள்ளான இந்த விமானம் ‘ரெட்பேர்ட் ஏர்வேஸ்’ நிறுவனத்திற்குச் சொந்தமானது. இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த இந்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான DGCA உத்தரவிட்டுள்ளது.
A medical air ambulance (Beechcraft C90) operated by Redbird Airways crashed in the dense forests of Jharkhand’s Chatra district while transporting a burn victim from Ranchi to Delhi. All seven individuals on board, including the patient, medical staff, and crew, were killed after the aircraft lost radar contact due to suspected bad weather. Authorities have recovered the bodies, and the DGCA has initiated an investigation into the tragic incident.