Skip to main content

Super Tamils

அதிகாரி இல்லா வவுனியா; மக்கள் அலைக்கழிவு

வவுனியா சிங்கள பிரதேச செயலகத்தில் உள்ள மேலதிக மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு சான்றிதழ்கள் பெறச் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்களைப் பெறுவதற்காக நீண்ட தூரம் கடந்து வரும் மக்களை, அங்குள்ள உத்தியோகத்தர்கள் உரிய அதிகாரிகள் கையொப்பமிட இல்லை எனக் கூறி திருப்பி அனுப்பி வருகின்றனர்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

தமக்கென நிரந்தரப் பதிவாளர் ஒருவர் இல்லாத காரணத்தால், அடிக்கடி இவ்வாறான ஏமாற்றமான சூழலைச் சந்திக்க நேரிடுவதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்காகச் சான்றிதழ் பெற வருவோர் அலைக்கழிக்கப்படுவதுடன், வேறு பிரதேச செயலகங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுவதால் மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

பொதுமக்களின் நேரத்தையும் பணத்தையும் விரயமாக்கும் இந்தச் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். எனவே, உயர் அதிகாரிகள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, தமக்கான சேவைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வவுனியா மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

________________________________________________________________________________________________________________________

Public in Vavuniya South Sinhala Divisional Secretariat are facing severe difficulties in obtaining birth, death, and marriage certificates due to the absence of a permanent registrar. Officials frequently turn away applicants claiming there are no authorized signatories available, leading to widespread frustration and calls for immediate intervention by higher authorities to streamline the service.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *