அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்திலுள்ள கெய்ன்ஸ்வில் பகுதியில் நேற்று ஒரு பரபரப்பான சம்பவம் நிகழ்ந்தது. சிறிய ரக விமானம் ஒன்றில் திடீரென எஞ்சின் கோளாறு ஏற்பட்டதால், திட்டமிட்டபடி விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் போனது. இதனால் வேறு வழியின்றி விமானி, அருகில் இருந்த வாகன நெரிசல் மிகுந்த பிரதான வீதி ஒன்றில் விமானத்தை அவசரமாகத் தரையிறக்க முயன்றார்.
வீதியில் தரையிறங்கிய அந்த விமானம், கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இந்த விபத்தில் பல வாகனங்கள் பலத்த சேதமடைந்ததுடன், அவற்றில் பயணித்த பொதுமக்களும் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த அதிர்ச்சிகரமான விபத்து தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. எஞ்சின் கோளாறு ஏற்பட்டதற்கான துல்லியமான காரணங்கள் குறித்து விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
______________________________________________________________________________________
A small plane made an emergency landing on a busy highway in Gainesville, Georgia, due to an engine failure. During the landing, the aircraft collided with several vehicles, causing damage and injuring several people who were later hospitalized. Authorities have launched an investigation into the technical failure as footage of the dramatic incident circulates on social media.