கனடாவில் விமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இந்தியாவின் தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த இரு மாணவர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
கனடாவில் கடந்த 18ஆம் தேதி அதிகாலை ரெஜினாவிலிருந்து கார்லைல் வழியாக ஸ்டெய்ன்பாக், மனிடோபா பகுதிக்கு இரவு நேரப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது சஸ்காட்சுவான் பகுதி அருகில் இந்த விமான விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.
உயிரிழந்தவர்கள் நமது இந்தியாவில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த மனோஜ் சிவகுமார் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்ரீசரன் திருஞானசம்பந்தம் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
இந்தச் சோகச் சம்பவம் குறித்து கனடாவுக்கான இந்தியத் தூதரகம் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தத் துயரமான மற்றும் கடினமான சூழலில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து துணை நிற்போம் என்றும், இருவரின் உடல்களையும் இந்தியாவுக்குத் கொண்டு செல்லத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வோம் என்றும் உறுதி அளித்துள்ளது.
Two flight training students from Tamil Nadu and Puducherry, India, tragically died in a plane crash near Saskatchewan while conducting a night training flight in Canada.