Skip to main content

Super Tamils

சீனத் துறைமுகத்தில் சரக்குக் கப்பலில் பயங்கரத் தீ…! 25 பேர் உயிரிழப்பு – தீவிர விசாரணைக்கு உத்தரவு.

கிங்டாவோ துறைமுகத்தில் வெளிநாட்டுச் சரக்குக் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் 25 பேர் பலி

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

கிழக்கு சீனாவின் முக்கிய வர்த்தக மையமான கிங்டாவோ துறைமுகத்தில் பழுதுபார்ப்புக்காக நின்றுகொண்டிருந்த வெளிநாட்டு சரக்குக் கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பரிதாபமாக 25 பேர் உயிரிழந்துள்ளதாகச் சீன அரசு ஊடகமான சிசிரிவி தெரிவித்துள்ளது.

இந்தக் கப்பலில் மொத்தம் 42 பேர் இருந்தனர். அவர்களில் 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதில் காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 31 அன்று கிங்டாவோ துறைமுகத்திற்கு வந்த ‘ஓஷன் மெலடி’ என்ற லைபீரியக் கொடி தாங்கிய 190 மீட்டர் நீளமுள்ள சரக்குக் கப்பலில்தான் இந்த விபத்து நேரிட்டுள்ளது. கப்பல் தளத்தில் பராமரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, காலை 11:15 மணியளவில் தீப்பிடித்திருக்கிறது. சுமார் 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகே தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த விபத்தைத் தொடர்ந்து மீட்புப் பணிகளை உடனடியாகத் தொடங்குமாறு சீன அதிபர் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுபோன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் லி சியாங் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து சீன அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

A tragic fire on a foreign cargo ship undergoing repairs at China’s Qingdao port resulted in the deaths of 25 people, prompting immediate rescue efforts and an ongoing investigation ordered by Chinese leaders.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்