அமெரிக்க மத்திய கட்டளைக் குழு வெளியிட்டுள்ள தகவலின்படி, ஈரானுக்குச் சொந்தமான மசகு எண்ணெய்யை ஏற்றிச் சென்ற ஐந்து கப்பல்கள் அழிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல் மீது ஈரான் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படையினர் பலத்த ஏவுகணைகளைக் கொண்டு இரண்டு முறை தாக்குதல் நடத்த முயன்றனர். இதனைத் தொடர்ந்துதான் இந்த அதிரடித் தாக்குதல்களை அமெரிக்க மத்திய கட்டளைக் குழு மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஓமன் வளைகுடா பகுதியில் நின்றுகொண்டிருந்த கவிஸ் (M/T Kaviz), சார்மினார் (M/T Charminar), ஹொரைசன் 1 (M/T Horizon 1) மற்றும் றியெஸ்கோ (M/T Riesco) ஆகிய எண்ணெய் கப்பல்களும், கர்க் தீவு அருகே இருந்த டெர்யா (M/T Derya) கப்பலும் அமெரிக்கப் படைகளால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், இந்தத் தாக்குதல்களை நடத்துவதற்கு முன்பாகவே, சம்பந்தப்பட்ட கப்பல்களில் வேலை பார்த்த பணியாளர்களைப் பாதுகாப்பாக வெளியேறுமாறு அமெரிக்கப் படைகள் முன்கூட்டியே அறிவுறுத்தியிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், அமெரிக்க தரப்பிலிருந்து வந்துள்ள இந்தச் செய்தி குறித்து ஈரான் தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வமான பதிலும் அளிக்கப்படவில்லை.
The US Central Command states it has destroyed five Iranian oil tankers following attempted missile attacks by the Iranian Islamic Revolutionary Guard Corps on a US warship, while Iran has not yet responded to the incident.