இயற்கையின் கோரத் தாண்டவம் எப்படி இருக்கும் என்பதை நேபாளத்தில் நடந்த இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது. சீனா எல்லையை ஒட்டியுள்ள நேபாளப் பகுதிகளில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவால் அங்குப் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணி இன்று 13-வது நாளாக மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பயங்கர இயற்கை பேரழிவில், நேபாளம் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளிலும் சேர்த்து இதுவரை 1384 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இன்னும் சுமார் 5500-க்கும் அதிகமானோரைக் காணவில்லை. இதில் சுமார் 800 வெளிநாட்டவர்களும் அடக்கம்.
நேபாளத்தில் மட்டும் இதுவரை 1,341 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் சுமார் 4996 பேரைக் காணவில்லை. மீட்புக் குழுவினர் தொடர்ந்து அவர்களைத் தேடி வருகின்றனர்.
அதேபோல், சீனாவின் திபெத் பகுதியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. மேலும், அங்கு 519 பேர் மாயமாகியுள்ளனர்.
இருப்பினும், ஒரு சிறிய நம்பிக்கை என்னவென்றால், சம்பவத்தின் 10-வது நாளான கடந்த வெள்ளிக்கிழமைக்குப் பின்னரும் 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் நீர்மின் நிலையங்களின் சுரங்கப் பாதைகளில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது அங்கு மீட்புப் பணிகள் குறித்து நேபாள சக்தித்துறை அமைச்சர் விராஜ் பக்த சிரேஷ்டா கூறுகையில், “புவியியல் ரீதியான சவால்கள், மோசமான வானிலை மற்றும் தொடர்பாடல் வசதிகள் இல்லாத போதிலும், நீர்மின் நிலைய சுரங்கங்களில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
Rescue operations for thousands of missing people in Nepal and China, following a devastating glacial flood, have entered their 13th day, with the death toll rising to 1384 and over 5500 unaccounted for. Despite immense geographical and weather challenges, authorities are persisting with the search, with four survivors discovered even after the 10th day.