பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர், பிரபல அழகுக் கலை பயிற்றுவிப்பாளர் சூலாபத்மேந்திர குமாரபத்திரன பிலியந்தல பகுதியில் உள்ள தொழிலதிபருக்கு சொந்தமான வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக.
அழகுக்கலை மற்றும் ஆடைவடிவமைப்புத் துறையில் புகழ்பெற்ற பிரபல பயிற்றுவிப்பாளர் சூலாபத்மேந்திர குமாரபத்திரன அவர்களின் திடீர் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்தரமுல்லையில் உள்ள ஒரு ஹோட்டலில் அவர் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியின் பின்னர் நேற்று காலை (31) அவர் அந்த தொழிலதிபருடன் வீட்டிற்கு வந்ததாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்போது நித்திரையிலிருந்த அவர் நீண்ட நேரம் பதிலளிக்காததால், 1990 அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை்போது சம்பவ இடத்திற்கு வந்த சுகாதார பணியாளர்கள் அவரைப் பரிசோதித்து அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதிசெய்துள்ளனர்.
இதனையடுத்து தொழிலதிபர் பிலியந்தல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், அவரது இறப்புக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், பிரேதப் பரிசோதனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
46 வயதான இவர் அண்மைய கால அழகிப் போட்டி நிகழ்வுகளிலும் கலந்துகொண்டிருந்தார்.
ஆடைவடிவமைப்புத் துறையிலும் அழகிப்போட்டிகளுக்கான பயிற்சிகளை வழங்குவதிலும் சிறந்த வல்லுநராக அவர் அடையாளப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Renowned beauty culture instructor Sulapadmentra Kumarapathirana was found dead under suspicious circumstances at a businessman’s house in Piliyandala, and police are currently investigating the cause of death through post-mortem examinations.