Skip to main content

Super Tamils

கனடா வேலைவாய்ப்பு எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி…! போலி விசா வழங்கி இளைஞர்களிடம் ரூ.50 இலட்சம் வரை சுருட்டும் வலையமைப்பு அம்பலம்.

கனடாவில் வேலைவாய்ப்பு வழங்கி அங்கு குடியேற்றுவதாகக் கூறி, கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்யும் ஊழல் வலையமைப்பு ஒன்று போலியான ஆவணங்களை வழங்கி தற்போது பல பகுதிகளில் செயற்பட்டு வருகிறது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

இன்றைய காலகட்டத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆசையை காட்டி நடக்கும் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், துபாயை மையமாக வைத்து இயங்கி வரும் ஒரு கும்பல், நம் நாட்டு இளைஞர்களை குறிவைத்து இந்த வலையை விரித்துள்ளது. வெளிநாடு சென்று செட்டிலாக வேண்டும் என்ற கனவில் இருக்கும் பலரும் இவர்களின் சதியில் எளிதில் சிக்கிக் கொள்கிறார்கள். இந்த ஆபத்தான முறைகேட்டை ஹிரு CIA ஊடகம் தற்போது வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

குறிப்பாக, தமிழ் இளைஞர்களை குறிவைத்து துபாயில் இருக்கும் நபர் ஒருவர் பல திட்டங்களை தீட்டி வருகிறார். கனடாவில் நல்ல வேலை வாங்கித் தருவதாக கூறி அவர் பெண்களிடம் பேசிய ஆடியோ ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. கொழும்பில் உள்ள இரண்டு பேரை தொடர்பு கொள்ளச் சொல்லி, கனடா வேலைக்கான மொத்தத் தொகையாக 45 லட்சம் ரூபாய் வரை அந்த நபர் பேரம் பேசியுள்ளார்.

இதை நம்பிச் சென்ற இளைஞர்களை கொழும்புக்கு வரவழைத்து கைவிரல் ரேகைகளையும் அவர்கள் பெற்றுள்ளனர். விசா மற்றும் விமான டிக்கெட் செலவு என்று சொல்லி பலரிடமும் சேர்த்து சுமார் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி கும்பல் சுருட்டியுள்ளது. பணம் கையில் கிடைத்ததும் அந்த நபர்கள் போனை எடுப்பதில்லை, தொடர்புகொள்ளவும் முடியவில்லை.

சந்தேகம் அடைந்த இளைஞர்கள் அந்த விசாவை கொழும்பில் உள்ள கனடா தூதரகத்தில் காட்டியபோதுதான் பேதி அதிர்ச்சி காத்திருந்தது. அது அத்தனையும் போலியான ஆவணங்கள் என்பது தூதரக அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த முறைகேடு ஹிரு CIA மூலமாக வெளியில் வரப்போகிறது என்று தெரிந்ததும், துபாயில் இருக்கும் அந்த பிரதான மோசடிக்காரன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வட்ஸ்அப்பில் மிரட்டல் விடுத்துள்ளான். நீ எங்கிருக்கிறாய் என்பது எனக்கு தெரியும், தேவையில்லாமல் ஆடாதே, உன்னை விட பல பேரை பார்த்துவிட்டேன் என்ற ரீதியில் அவன் மிரட்டியுள்ளான்.

நாளைக்கு இந்த மோசடி வலையில் நீங்களும் ஒரு இரையாகாமல் இருக்க, இந்த விழிப்புணர்வுத் தகவல் உங்களை எச்சரித்து பாதுகாக்கவே வெளியிடப்பட்டுள்ளது.

An investigative report by Hiru CIA has uncovered a massive job scam operated from Dubai, where fraudsters use fake documents and false promises of Canadian employment to swindle millions of rupees from Tamil youth, even issuing threats to victims when exposed.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்