அனன்யா ராஜ் மரணம் பிரபல ஹிந்தி நடிகை (வயது 27). ஹிந்தியில் 7 ஹவர்ஸ் டு ஹோ, தி பைனல் எக்சிட், கோஸ்ட் ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார். தெலுங்கில் தஹ்டிலி படத்திலும் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், பல குறும்படங்களிலும், இசை நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். டிவி வெப் தொடர்களிலும் இவர் நடித்துள்ளார்.
இந்நிலையில், அனன்யா ராஜ் மரணமடைந்துவிட்டதாக இன்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். உடல் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்சினைகளைச் சந்தித்து வந்த அனன்யா ராஜ், கடந்த மாதம் 15ஆம் திகதி வீட்டில் தூக்கத்திலேயே மரணமடைந்ததாகக் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
அனன்யாராஜின் மறைவுச் செய்தி திரைத்துறையினர் மற்றும் அவரது இரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனன்யாவின் இறப்புக்கான முழுமையான காரணத்தை அவர்தம் குடும்பத்தினர் இன்னும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Popular 27-year-old Hindi and Telugu actress Ananya Raj passed away in her sleep at home on the 15th of last month due to ongoing health and mental well-being struggles, leaving her fans and the film industry in deep shock as her family withheld the exact cause of death.