இந்தோனேசியாவில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குப் பாரம்பரிய பெயர்களுக்குப் பதிலாக, புகழ்பெற்ற ஜப்பானிய அனிமே (Anime) கதாபாத்திரங்கள் மற்றும் சர்வதேச பொப் இசைக்கலைஞர்களின் பெயர்களை அதிகளவில் சூட்டிப் பதிவு செய்து வருகின்றனர் என்று, அந்த நாட்டின் மக்கள் தொகை மற்றும் சிவில் பதிவு இயக்குநரகம் தகவல் வெளியிட்டுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் பெற்றோர்களின் மனநிலையில் ஒரு சுவாரஸ்யமான மாற்றம் பார்க்க முடிகிறது. அந்த நாட்டின் மக்கள் தொகை பதிவேட்டின் தரவுகளின்படி, பிரபல அனிமே தொடரான ‘நருட்டோ’ அல்லது ‘உசுமாகி’ பெயரில் நூற்றுக்கணக்கானோரும், ‘டொரேமான்’ கார்ட்டூன் கதாபாத்திரமான ‘நோபிதா’ பெயரில் பலர் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதுதவிர இன்னும் சில பிரபல அனிமே கதாபாத்திரங்களின் பெயர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. கார்ட்டூன் மற்றும் அனிமே உலகத்தைத் தாண்டி, உலகப் புகழ்பெற்ற முன்னணி இசை நட்சத்திரங்களின் பெயர்களையும் தங்களது மழலைகளுக்குப் சூட்டி மகிழ்கின்றனர்.
இது குறித்து மக்கள் தொகை மற்றும் சிவில் பதிவு இயக்குநரகத்தின் தலைவர் தெகு செத்தியாபுடி கூறுகையில், இந்தோனேசியாவின் பெயர் சூட்டும் கலாசாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், இளைய தலைமுறையினர் தங்களது பாரம்பரிய முறைகளை விடுத்து தங்களின் நவீன விருப்பங்களுக்கு முக்கியத்துவம் தருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Parents in Indonesia are increasingly naming their newborns after famous Japanese anime characters and international pop icons instead of traditional names, reflecting a shifting cultural trend towards modern influences as reported by the country’s civil registry.