Skip to main content

Super Tamils

மெகசின் சிறைக்குள் போதைப்பொருள் விநியோகம்…! ரூ.20 இலட்சம் பெறுமதியான ‘ஐஸ்’, ஹெரோயினுடன் சிறைச்சாலை அதிகாரி கைது.

இந்தச் சோதனையின் போது, சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்புடைய 100 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் 20 கிராம் ஹெரோயின் ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

முன்னதாக, தெஹிவளையைச் சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் போதைப்பொருட்களுடன் கல்கிஸ்ஸ பகுதியில் வைத்து காவல்துறையினரால் பிடிக்கப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், மெகசின் சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் ‘வாட்ஸ்அப்’ மூலம் கொடுத்த அறிவுறுத்தலின் பேரிலேயே தான் இந்தப் பொருட்களைச் சேகரித்ததாக ஒப்புக்கொண்டார்.

சேகரித்த போதைப்பொருட்களை வனத்த வீதியில் வசிக்கும் மற்றொரு நபரிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டிருந்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து, கல்கிஸ்ஸ பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியக பொறுப்பதிகாரியின் நேரடி மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையின் மூலம், போதைப்பொருளைப் பெற்றுக்கொள்ள வந்த சிறைச்சாலை அதிகாரி சிக்கியுள்ளார்.

A prison officer was arrested by the Mount Lavinia Crimes Investigation Bureau for allegedly distributing drugs to the Magazine Prison in Borella. The investigation was triggered after the arrest of a 32-year-old man who admitted to acting on instructions from an inmate via WhatsApp, leading police to uncover the officer’s involvement in the smuggling operation.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்