மனித உடல் இருப்பதாகக் கருதி ஆரம்பிக்கப்பட்ட கொலை வழக்கு விசாரணை, அவுஸ்திரேலியாவில் கைவிடப்பட்ட பயணப்பை ஒன்றிற்குள், அது மனித உருவத்தை ஒத்த பொம்மை (Lifelike sex doll)என்ற உண்மை கண்டறியப்பட்ட பின்னர், முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
நண்பர்களே, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள ‘ஓலன்’ கிராமப் பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்த இரண்டு பேர், சாலையோரம் கிடந்த ஒரு பயணப்பையைப் பார்த்துவிட்டு உடனே போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
இது ஒரு கொடூரமான கொலைச் சம்பவமாக இருக்கலாம் என்று சந்தேகித்த காவல்துறை, உடனடியாக சிறப்புத் தடயவியல் நிபுணர்களையும் துப்பறியும் குழுவையும் அந்த இடத்திற்கு விரைந்து அனுப்பி விசாரணையைத் தீவிரப்படுத்தியது.
ஆனாலும், அங்கு நடத்தப்பட்ட தடயவியல் சோதனைகளில் அது எந்தவித மனித உடலும் கிடையாது என்றும், ஆடைகள், தலைமுடி மற்றும் மூக்குத்தி எல்லாம் அணிவிக்கப்பட்ட மிகவும் தத்ரூபமான ஒரு பொம்மை என்பது தெளிவாகத் தெரியவந்தது.
அந்தப் பொம்மையில் சிறு சிறு காயங்களும் சில உராய்வு அடையாளங்களும் இருந்ததால் தான், இது உண்மையான மனித உடல் தானோ என்ற சந்தேகம் போலீசாருக்கு மேலும் தீவிரமடைந்தது.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய நியூ சவுத் வேல்ஸ் காவல் துறை கண்காணிப்பாளர் லிண்டா பிராட்பரி, ஆரம்பத்தில் அனைவரும் இது மனித உடல் என்றே தவறாக நம்பியதாகத் தெரிவித்தார்.
பார்க்கும் போது மனித எச்சங்களைப் போலவே மிகவும் தத்ரூபமாக அது காட்சியளித்த போதிலும், நவீன விஞ்ஞான பரிசோதனைகள் மூலம் அது ஒரு பொம்மை என்பது உறுதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சரியான சட்ட நடைமுறைகளைக் பின்பற்றியே இந்த விசாரணை முழுமையாக நடத்தப்பட்டதால் இதில் எந்தத் தவறும் இல்லை என்று தெரிவித்த காவல்துறை, இந்த விசித்திரமான சம்பவத்தின் அனைத்து விசாரணைகளையும் அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டதாக அறிவித்துள்ளது.
A murder investigation launched after a discarded bag in Australia was suspected to contain a human body has been officially closed after forensic tests confirmed it was actually a lifelike sex doll.