SLS தரச்சான்றிதழ் அற்ற மற்றும் தரமற்ற தலைக்கவசங்களை தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களைக் கண்டறிவதற்கான விசேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.
இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனம் மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை ஆகியவற்றுடன் இணைந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன இது தொடர்பாக மேலும் குறிப்பிடுகையில்,
இந்தச் சோதனை நடவடிக்கைகளின் போது கண்டறியப்படும் தரமற்ற தலைக்கவசங்களை தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தரமற்ற தலைக்கவசங்களை அணிவது என்பது தலைக்கவசம் அணியாமல் செல்வதற்குச் சமமான ஆபத்தானது என்பதால், பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பான முறையில் SLS தரச் சான்றிதழ் பெற்ற தரமான தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
The National Council for Road Safety, in collaboration with the Sri Lanka Standards Institution and the Consumer Affairs Authority, has launched special inspection operations to crack down on the manufacture and sale of non-SLS-certified, substandard helmets, warning of strict legal action against violators and urging the public to use only certified safe helmets.