Skip to main content

Super Tamils

சொக்லட் பைகளுக்குள் ரூ.9 கோடி கொக்கெய்ன்…!கட்டுநாயக்கில் மலேசியர் கைது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற மலேசிய நாட்டைச் சேர்ந்த விமானப் பயணி ஒருவர், சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனது பயணப் பைக்குள் ஒன்பது கோடி எட்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்தி வர முயன்றுள்ளார்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

இவ்வாறு பிடிபட்டவர் மலேசியாவில் உள்ள ஒரு சிற்றுண்டிச்சாலையில் வேலை பார்க்கும் 23 வயதுடைய இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொகையை நாட்டுக்குக் கொண்டு வந்தால் இவருக்கு 10,000 மலேசிய ரிங்கிட் தருவதாகச் வாக்குறுதி அளித்துள்ளனர்.

இந்தக் கொக்கெய்ன் தொகையை மலேசியாவின் கோலாலம்பூர் நகரத்தில் விலைக்கு வாங்கிவிட்டு, அங்கிருந்து துபாய்க்கு வந்து, பின்னர் எமிரேட்ஸ் விமானம் மூலமாக முந்தின நாள் காலை 09.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்து சேர்ந்துள்ளார்.

அவர் தன் கைவசம் கொண்டு வந்த பைக்குள், சொக்லட் மற்றும் டொபி வைக்கப்பட்டிருந்த 03 பைகளுக்குள் 1 கிலோகிராம் 816 கிராம் எடையுள்ள கொக்கெய்ன் போதைப்பொருளை 92 மாத்திரைகள் போலத் தயாரித்து, மிகவும் சாதுரியமாக மறைத்து எடுத்து வந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட அந்த வெளிநாட்டுப் பயணியும் கைப்பற்றப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருளும், மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காகக் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

A 23-year-old Malaysian cafeteria worker was arrested by customs narcotics control officers at the Bandaranaike International Airport while attempting to smuggle 1.816 kg of cocaine—valued at over 90 million rupees—hidden inside chocolate and candy packets after arriving from Kuala Lumpur via Dubai.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்