Skip to main content

Super Tamils

பட்டம் நூலால் விமானத்திற்கு ஆபத்து..! இரத்மலானையில் அவசர தரையிறக்கம்.

இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானம் ஒன்று, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட ஆபத்திலிருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் இடது சில்லு மற்றும் இயந்திரப் பகுதி உள்ளிட்ட இடங்களில் பட்டத்தின் நூல் அதிகளவில் சிக்கியிருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

விமான நிலையங்கள் மற்றும் ஓடுபாதைகளுக்கு அருகில் பட்டம் விடுவது ஆபத்தானது என ஏற்கனவே பலமுறை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற செயல்கள் விமானப் பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாக அமைகின்றன. உலக அளவில் விமான விபத்துகளுக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக ஓடுபாதைகளுக்கு அருகில் பட்டம் விடுதல் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது விமானங்களின் இயக்கத்திற்கு நேரடியாகவே பெரும் தடையை ஏற்படுத்துகிறது.

தற்போது கட்டுநாயக்க, இரத்மலானை, ஹிங்குரகொட, சீனக்குடா, அனுராதபுரம், யாழ்ப்பாணம் (பலாலி), கட்டுக்குருந்த, கொக்கல, வவுனியா, வீரவில, மட்டக்களப்பு மற்றும் மத்தள ஆகிய விமான நிலையங்களின் ஓடுபாதைகளைச் சுற்றி பட்டம் விடுவது அதிகரித்துள்ளது. இது மிகவும் அபாயகரமான சூழலை உருவாக்கி வருகின்றது.

எனவே, பொதுமக்களின் பாதுகாப்பையும் விமானப் பயணிகளின் உயிரையும் கருத்தில் கொண்டு, ஓடுபாதைகள் மற்றும் விமான நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் மக்கள் அந்தப் பகுதிகளில் பட்டம் விடுவதை முற்றிலுமாகத் தவிர்க்குமாறு இலங்கை விமானப்படை கேட்டுக்கொண்டுள்ளது.

A Sri Lanka Air Force Y-12 aircraft was forced to make an emergency landing at the Ratmalana airport today after kite strings became entangled in its landing gear and engine. The Air Force has issued a stern warning to the public, emphasizing that flying kites near airports and runways poses a severe threat to aviation safety and can lead to major accidents, urging people to completely avoid such activities near all listed airfields across the country.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்