இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச ஒரு நாள் போட்டியானது நேற்றைய தினம் Birminghamஇல் இடம்பெற்றது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் நேற்றைய தினம் Birmingham மைதானத்தில் தங்களது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் மோதிக்கொண்டன.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் தலைவர் Harry Brook, முதலில் துடுப்பெடுத்தாடுவதற்குத் தீர்மானித்தார். இதன்போது, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 258 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
வெற்றி இலக்காக 259 ஓட்டங்களை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, மிகச் சிறப்பாக விளையாடி 45.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 262 ஓட்டங்களைக் கடந்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இதேவேளை, இந்தப் போட்டியில் பங்கேற்றதன் மூலம் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர், 200 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இங்கிலாந்து வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
In the first ODI held in Birmingham, India secured a comfortable 6-wicket victory over England after chasing down a target of 259 runs, taking a 1-0 lead in the three-match series. Notably, England’s Jos Buttler achieved a significant milestone during this match by becoming only the second Englishman to play in 200 international ODI matches.