அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உருவப்படத்தின் மீது கூழாங்கற்களை வீசி, “சாத்தானைக் கல்லெறிதல்” என்ற குறியீட்டு சடங்கில் ரானின் முன்னாள் உச்ச தலைவர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பெருந்திரளான மக்கள் ஈடுப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீமையான விஷயங்களை முற்றிலும் நிராகரிப்பதை வெளிப்படுத்தும் விதமாக, ஹஜ் யாத்திரையின் போது சாத்தானைக் குறிக்கும் தூண்களை நோக்கி சிறிய கற்களை எறியும் ஒரு பாரம்பரிய சடங்கு வழக்கத்தில் உள்ளது. அதே பாணியைப் பின்பற்றித்தான் தற்போதைய இந்தச் செயலும் அரங்கேற்றப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் தெஹ்ரானின் முக்கிய வீதிகளில் ஈரானிய தேசியக் கொடிகளுடனும், மறைந்த தங்களது முன்னாள் தலைவரின் திருவுருவப் படங்களுடனும் பெருந்திரளான ஆண்களும் பெண்களும் தங்களது பிஞ்சுக் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வீதிக்கு வந்துள்ளனர்.
அப்படியாகத் திரண்டிருந்த கூட்டத்தில், சாலையோரமாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்மணி, தனது ஒரு கையில் நாட்டின் தேசியக் கொடியையும், மற்றொரு கையில் டொனால்ட் ட்ரம்பின் முகம் அச்சிடப்பட்ட “தேடப்படும் குற்றவாளி” என்ற சுவரொட்டி வடிவிலான பதாகை ஒன்றையும் ஏந்தியவாறு காணப்பட்டார்.
மறைந்த அலி கமேனியின் மரணத்திற்குப் பழிவாங்கும் நோக்கில், இந்த அசம்பாவிதத்திற்கு காரணமான டொனால்ட் ட்ரம்பை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடித்துக் கொடுப்பவருக்கு 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெகுமதியாக வழங்கப்படும் என்று அந்தப் பதாகையில் பகிரங்கமாக எழுதப்பட்டிருந்தது.
இதற்கிடையில், இந்த இறுதி ஊர்வலம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், கமேனியின் மரணத்தின் பின்னணியில் செயல்பட்டதாகக் கருதப்படும் ட்ரம்பின் முக்கிய “போர் வெறி ஆலோசகர்கள்” அடங்கிய இலக்குப் பட்டியல் ஒன்றையும் அங்கிருந்த மக்கள் தங்களுக்குள் இரகசியமாகப் பகிர்ந்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
During the funeral of Iran’s former supreme leader Ali Khamenei, a massive crowd symbolically performed the ritual of “stoning the devil” by throwing pebbles at portraits of US President Donald Trump. Mourners flooded the streets of Tehran with flags and posters, including a “wanted” banner offering a $20 million bounty for Trump, dead or alive, while a hit list of his war advisors allegedly circulated among the crowd.