ஐரோப்பிய நாடுகள் முழுவதையும் உலுக்கி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்சில் மட்டும் இதுவரை சுமார் ஆயிரம் பேர் வரை உயிரிழந்திருப்பதாக அந்நாட்டின் பொதுச் சுகாதார அமைப்பு அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் 20 அன்று ஆரம்பித்த இந்த அதீத வெப்ப அலை, ஐரோப்பாவின் வரலாற்றிலேயே மிகக் கொடூரமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இது மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்தது மட்டுமன்றி, மின் உற்பத்தித் தட்டுப்பாடு, உள்கட்டமைப்புச் சேதங்கள் எனப் பல நாடுகளைப் பெருமளவில் முடக்கியுள்ளது.
தற்போது கிடைத்துள்ள ஆரம்பக்கட்டத் தரவுகளின்படி, உயிரிழந்தவர்களில் அதிகமானோர் 65 வயதைக் கடந்த முதியவர்கள் என்று தெரியவந்துள்ளது. முதியோர் இல்லங்கள் மற்றும் வீடுகளில் நிகழ்ந்த மரணங்கள் குறித்த முழு விபரங்களும் முழுமையாகத் திரட்டப்படும் போது, இந்த உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
எச்சரிக்கை
தற்போது பிரான்சின் பெரும்பான்மையான இடங்களில் வெயிலின் தாக்கம் ஓரளவுக்குக் குறையத் தொடங்கியிருந்தாலும், வடகிழக்குப் பகுதிகளில் உள்ள சில மாவட்டங்களுக்கு இன்னமும் வெப்ப அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் கடுமையான வெப்ப அலை காரணமாக 1,000 பேர் பலியானதாக அதிர்ச்சித் தகவல் இது குறித்து அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ஸ்டெபானி ரிஸ்ட் கூறுகையில், வானிலை மாறி வெப்பம் குறைந்தாலும் கூட, அதன் தாக்கமும் உடல்நலப் பாதிப்புகளும் அடுத்த 10 நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது எனவே, பொதுமக்கள் தொடர்ந்து தங்களைப் பாதுகாப்பாகவும் விழிப்புடனும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
உலகளாவிய சராசரி விகிதத்தை விடவும் ஐரோப்பாவில் பருவநிலை மாற்றம் மிகத் தீவிரமாக அரங்கேறி வருவதே, இது போன்ற ஆபத்தான காலநிலை மாற்றங்களுக்குக் முக்கியக் காரணம் என்று விஞ்ஞானிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
An unprecedented and severe heatwave in Europe has claimed the lives of approximately 1,000 people in France alone, mostly affecting senior citizens aged 65 and older. The extreme weather has severely disrupted infrastructure and power generation across multiple countries, prompting health officials and scientists to warn that death tolls may rise further while linking this catastrophic event to the accelerated pace of climate change in Europe.