Skip to main content

Super Tamils

19 மாவட்டங்களில் இன்று கனமழை…! வானிலை மையம் எச்சரிக்கை.

இன்று தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

தற்போதைய வானிலை மாற்றம் குறித்து சென்னை வானிலை மையம் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளது. தென்கிழக்கு அரபிக் கடல் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள வான்வெளியில் ஒரு வளிமண்டல சுழற்சி உருவாகியுள்ளது.

அதேநேரம், கேரளா மற்றும் அதன் தென்கிழக்கு பகுதிகள் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதையும் கடந்து செல்கிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்று வீசக்கூடும் என்றும், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, தமிழகத்தின் பிற மாவட்டங்களான ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களிலும் இன்று பரவலாக கனமழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை, இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், மழை பெய்யும் போது தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலமாக வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *