ஐநா வெளியிட்டுள்ள அறிக்கை – காசாவில் சிறுவர்கள் திட்டமிட்டு இலக்கு வைக்கப்படுவது இனப்படுகொலையே
காசாவில் பாலஸ்தீனக் குழந்தைகளை இஸ்ரேல் ராணுவம் குறிவைத்துத் தாக்குவது, அங்கு அரங்கேறி வரும் இனப்படுகொலையின் ஒரு கொடூரமான வடிவம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஆணைக்குழு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீனச் சிறுவர்களுக்கு எதிராக காசாவிலும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரைப்பகுதியிலும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் சர்வதேச விதிமீறல்களை இந்த அறிக்கை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது. மேலும், இஸ்ரேலின் இந்த கண்மூடித்தனமான நடவடிக்கைகள் அனைத்தும் கடுமையான போர்க்குற்றங்கள் மற்றும் மனிதநேயமற்ற செயல்கள் என்று ஐநா கடுமையாகச் சாடியுள்ளது. […]