வளிமண்டல மாற்றம்: கனமழைக்கு எச்சரிக்கை
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் ஆங்காங்கே அவ்வப்போது மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, ஊவா மாகாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளில் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். […]